பாரீஸ் ஒலிம்பிக் 2024: நதி நீர் சுத்தமில்லாததால் ஒத்திவைக்கப்பட்ட நிகழ்ச்சி
ஒலிம்பிக்கில் முக்கிய இடம் பிடித்த நதியிலுள்ள நீர் குறித்து நீண்ட நாட்களாகவே சர்ச்சை நிலவுகிறது.
இந்நிலையில், நதி நீர் சுத்தமில்லாததால், நதியில் நடைபெற இருந்த நீச்சல் பயிற்சி இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நதியில் மோசமான கிருமிகள்
ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் நடைபெற உள்ள Seine நதியில், ஈ.கோலை மற்றும் எண்டிரோகாக்கை என்னும் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
இந்த கிருமிகள் நீரில் இருக்கிறது என்றால், அந்த நீரில் கழிவு நீர் கலந்துள்ளது என்று பொருள் ஆகும்.
கடந்த மாத இறுதியில் நதி நீரை ஆய்வகத்தில் பரிசோதித்ததில், மனிதக்கழிவில் காணப்படும் அந்த இரண்டுவகை கிருமிகளும் நதி நீரில் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.
ஆகவே, அந்த நதி நீரில் நீச்சல் போட்டிகள் நடத்துவது நீச்சல் வீரர் வீராங்கனைகளின் உடல் நலத்தை பாதிக்கலாம் என்ற கருத்து எழுந்தது.
அதைத் தொடர்ந்து, நதி நீர் சுத்தமாகத்தான் உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக பாரீஸ் மேயரான Anne Hidalgo Seine நதியில் நீந்தினார்.
நீச்சல் பயிற்சி ஒத்திவைப்பு
ஆனால், உண்மையில், நதி நீரின் நிலையில் முன்னேற்றம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
நதி நீர் அசுத்தமாக உள்ளது தெரியவந்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடப்பதாக இருந்த நீச்சல் பயிற்சி ஒத்திவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, நேற்று நீச்சல் பயிற்சி மேற்கொள்ளப்பட இருந்த நிலையில், நதி நீரின் தரம் திருப்திகரமாக இல்லாததால், பயிற்சி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக ஒலிம்பிக் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
நதி நீரில் கிருமிகளின் அளவு, மழை பெய்வதைப் பொறுத்து மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சமீபத்தில் பாரீஸில் மழை கொட்டித்தீர்த்த நிலையில், Seine நதியில் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நீர் அதிகரித்தால், நீரின் வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்பநிலை அதிகரித்தால், அந்த வெப்பநிலை கிருமிகள் இனப்பெருக்கம் செய்ய சாதகமாக அமையும். ஆகவேதான், மழையைத் தொடர்ந்து Seine நதியில் தண்ணீரின் அளவு அதிகரிக்க, கிருமிகளின் அளவும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |