சிற்றுண்டிச்சாலைக்குள் பாய்ந்த கார்: பாரீஸில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம்
பாரீஸில் அமைந்துள்ள காபி ஷாப் ஒன்றிற்குள் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பாய்ந்ததில் ஒரு பெண் பலியானார். கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, பாரீஸில் அமைந்துள்ள திறந்தவெளி காபி ஷாப் ஒன்றிற்குள் பாய்ந்தது.
அதில் சிற்றுண்டி அருந்திக்கொண்டிருந்த 35 வயது பெண் ஒருவர் பலியானார். மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளார்கள், ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கவிழ்ந்து உருண்ட அந்த கார் திறந்தவெளி காபி ஷாப்பிற்குள் பாய்ந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர். விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பியோடிவிட்டார்.
காரிலிருந்த மற்றொருவர் மீட்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் நடந்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிசார் அவரை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Un homme en voiture a percuté une terrasse de café à Paris (17ème) faisant un mort et plusieurs blessés. L’auteur est en fuite. Il pourrait s’agir d’un accident selon les premières constatations. A confirmer. pic.twitter.com/VSYpyPVOHU
— Remy Buisine (@RemyBuisine) July 29, 2021
?? Tragique accident de la route rue Sauffroy avec une femme décédée percutée sur le trottoir protégé par des potelets par un chauffard.
— Geoffroy Boulard (@geoffroyboulard) July 29, 2021
Plusieurs blessés graves.
Sur place avec le Préfet @prefpolice @PompiersParis et mes adjoints @GuerrePhil @LoulouGauthey @AtanasePerifan pic.twitter.com/09H872pRn6