பாரீஸ் நகரில் அதிர்ச்சி சம்பவம்... பொலிசார் குவிப்பு: தப்பிய நபருக்கு வலைவீச்சு
பாரீஸ் நகரில் உணவம் ஒன்றில் கார் ஒன்று வேகமாக மோதிய சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
தீவிர தேடுதல் நடவடிக்கை
குறித்த சம்பவத்தை அடுத்து, அந்த வாகனத்தின் சாரதி தப்பி ஓடியதை அடுத்து, பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை துவங்கியுள்ளனர். பாரீஸ் நகரில் அமைந்துள்ள Le Ramus உணவகத்தின் மீதே தமது வாகனத்தை அந்த சாரதி செலுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் மேலும் மூவர் காயங்களுடன் தப்பியுள்ளனர். தகவலையடுத்து அவசர உதவிக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர்.
வாகன விபத்து குறித்து தற்போது விசாரணை துவக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, பாதுகாப்பு கருதி வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவயிடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய அந்த வாகனத்தின் ஒரு பயணி மது மற்றும் போதை மருந்து உட்கொண்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் எதிர்பாராத விபத்தா அல்லது சாரதியின் திட்டமிட்ட நடவடிக்கையா என்பது குறித்து பொலிசார் இதுவரை உறுதி செய்யவில்லை. மட்டுமின்றி, இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்து வருவதாகவும், எச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பது போன்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
பயணி ஒருவர் கைது
ஜூலை 26ம் திகதி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்கப்படுவதால், பிரான்ஸ் முழுவதும் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது. மட்டுமின்றி, ஐ.எஸ் அமைப்பும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் மிரட்டல் விடுத்துள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பியுள்ள நிலையில், வாகனத்தில் இருந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவயிடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |