பாரிஸில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ஒமிக்ரான் அச்சங்களுக்கு மத்தியில் பாரம்பரிய புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்ச்சிகளை பாரிஸ் ரத்து செய்துள்ளது.
ஒமிக்ரான் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பா முயற்சிப்பதால், அதன் பாரம்பரிய புத்தாண்டு வானவேடிக்கை நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக பாரிஸ் அறிவித்துள்ளது.
தொற்றுநோயின் பரவல் மற்றும் ஆண்டு இறுதி கொண்டாட்டங்கள் தொடர்பான அபாயங்கள் குறித்து, அதிகாரிகள் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று பிரான்சின் அறிவியல் குழு கூறியது.
இதைத்தொடர்ந்து, 2021 டிசம்பர் 31 அன்று சாம்ப்ஸ் எலிசீஸில் திட்டமிடப்பட்ட அனைத்து விழாக்களையும் ரத்து செய்வதாக பாரிஸ் நகராட்சி அதிகாரிகள் வருத்தத்துடன் அறிவித்துள்ளனர்.
வானவேடிக்கைகள் நடைபெறாது, துரதிர்ஷ்டவசமாக DJ செட் எதுவும் இருக்காது என்று பிரான்ஸ் மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு பாரிஸ் நகர மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.