6 நாட்களுக்கு பிறகு.,Eiffel Tower மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!
பிரான்ஸ் தலைநகரான பாரிசில் உள்ள ஈஃபிள் டவர்(Eiffel Tower), ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த ஆறு நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில், இன்று (ஞாயிறு, பிப்ரவரி 25, 2024) மீண்டும் திறக்கப்பட உள்ளது.
மூடப்பட்ட Eiffel Tower
கடந்த திங்கட்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரம் ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக மூடப்பட்டுள்ளது.
ஈபிள் டவரின் மேலாண்மை முறையை மேம்படுத்த வேண்டும் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கை முன்வைத்து அதிருப்தி தெரிவித்தனர்.
Getty
மேலும் ஊழியர்களின் சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் சேர்த்து முன்வைக்கப்பட்டது.
மீண்டும் திறக்கப்படும் Eiffel Tower
இந்நிலையில், தொழிற்சங்கத்தினர் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, சனிக்கிழமையன்று ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.
அதன்படி, ஈபிள் டவரின் பொருளாதார மாதிரியைக் கண்காணிக்க, ஊழியர் முதலீடு மற்றும் நிறுவனத்தின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getty
இதையடுத்து, 6 நாட்கள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு பிப்ரவரி 25, 2024 ஞாயிற்றுக்கிழமையான இன்று மாலை 6 மணிக்கு மீண்டும் பாரிஸில் உள்ள Eiffel Tower திறக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |