பிரான்ஸ் ரயில் நிலையம் ஒன்றில் தீப்பற்றி எரிந்த சிக்னல் மையம்: பின்னர் தெரியவந்த உண்மை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றில் அமைந்துள்ள சிக்னல் மையம் ஒன்றில் திடீரென தீப்பற்றியது.
கிழக்கு பிரான்ஸ் முதல் ஜேர்மனி வரை பாதிக்கப்பட்ட ரயில் சேவை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றான Gare de l’Est ரயில் நிலையத்தில் அமைந்துள்ள சிக்னல் மையம் ஒன்றில் திடீரென நேற்று தீப்பற்றியதால் ஜேர்மனி முதல் கிழக்கு பிரான்ஸ் வரை செல்லும் பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தீயில், 600 மின்சார கேபிள்கள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சரான Clément Beaune தெரிவித்துள்ளார்.
Photo by Thomas SAMSON / AFP
பின்னர் தெரியவந்த உண்மை
முதலில் இது ஒரு விபத்து என கருதப்பட்ட நிலையில், பின்னர் இது சதிவேலை என்பது தெரியவந்தது.
இது வேண்டுமென்றே செய்யப்பட்ட சதிவேலை என பாரீஸ் பகுதி ரயில் நிறுவனத் தலைவரான Anne-Marie Palmier கூறியுள்ள நிலையில், யார் இந்த நாசவேலையைச் செய்தது, எதற்காக செய்தார்கள் என உடனடியாக தெரியவரவில்லை.
பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.