சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம்: பாரிஸ் நகரில் பதறவைத்த சம்பவம்
குறித்த சிறுமி 20 வயது கடந்த பெண் ஒருவருடன் கட்டிடம் ஒன்றில் நுழைவதாக பதிவாகியிருந்தது.
விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் ஆறு பேரினை கைது செய்துள்ளனர்.
பாரிஸ் நகரில் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரின் சடலம் சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி மாயமானதாக பொலிசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி 3 மணியளவில் குறித்த சிறுமி பாடசாலையில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
@BFM
ஆனால் 20 நிமிடங்கள் கடந்தும் அவர் வீடு திரும்பவில்லை என்றே கூறப்பட்டது. இதனையடுத்து, அவரது தாயார் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார். தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்த பொலிசார், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கெமரா பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அதில், குறித்த சிறுமி 20 வயது கடந்த பெண் ஒருவருடன் கட்டிடம் ஒன்றில் நுழைவதாக பதிவாகியிருந்தது. ஆனால், தொடர்புடைய பெண் பின்னர் சூட்கேஸ் ஒன்றுடன் அந்த கட்டிடத்தில் இருந்து தனியாக வெளியேறுவதும் பொலிசார் கண்டறிந்தனர்.
தொடர்ந்து விசாரணையை முடுக்கிவிட்ட பொலிசார், சிறுமி கடத்தப்பட்டதாக முடிவுக்கு வந்தனர். இந்த நிலையில் இரவு 11.20 மணியளவில் குடியிருப்பற்ற நபர் ஒருவரால் சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட, அதில் தொடர்புடைய சிறுமி சடலமாக காணப்பட்டார்.
@BFM
மேலும், அவரது கழுத்தில் ஆழமான வெட்டு காயங்கள் காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் ஆறு பேரினை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
மேலும், உடற்கூறு பரிசோதனையில் குறித்த சிறுமி மூச்சுத்திணறலுக்கு (Asphyxiation) உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, இந்த வழக்கு தொடர்பான விரிவான விசாரணைக்கு பின்னரே, முழு தகவலும் வெளிவரும் என கூறப்படுகிறது.