பிரான்ஸ் தலைநகரில் பட்டப்பகலில் நடந்த பயங்கர சம்பவம்! மருத்துவமனை முன் நடந்த துப்பாக்கிச் சூடு
பிரான்ஸ் தலைநகரில் மருத்துவமனை முன்பு அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் பதினாறில் உள்ள செஞ்சிலுவைச் சங்க மருத்துவமனைக்கு முன்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு நபர் உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பொலிசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பாரிஸ் பதினாறின் Rue Michel-Ange உள்ள Henry-Dunant மருத்துவமனை முன்பு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த மருத்துவமனை முதியோர் காப்பாகமாகவும், கொரேனா தடுப்பு ஊசி மையமாகவும் இயங்கி வருகின்றது.
இந்த சம்பவத்தைக் கண்ட அங்கிருந்தவர்கள் கூறுகையில், கறுப்பு உடையுடனும், தலையை மறைத்தபடியும் வந்த நபரே இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர். இதில் ஏழு துப்பாக்கிக் குண்டுகள் தலையில் பாய்ந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த மருத்துவமனையில், பாதுகாப்புப் பணியிலிருந்த 33 வயதுடைய் பெண் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் Georges-Pompidou மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவரிடம் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை, இருப்பினும் விசாரணையில் இவர் 1987- ஆம் ஆண்டு பிறந்த 34 வயதுடையவர் என அடையளாம் காணப்பட்டுள்ளார்.
இருசக்கர வாகனத்தில் வந்த கொலையாளி, பதற்றமின்றி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான். பொலிசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.