பாரிஸ் கத்திக்குத்து சம்பவம்: தாக்குதல்தாரி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த வாரம் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவாத்தில், கைது செய்யப்பட்ட நபர் மீது கொலை முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த வாரம் பாரிஸின் Gare du Nord நிலையத்தில் கத்தி போன்று இருக்கும் உலோகக் கொக்கியால் 7 பேரை தாக்கி காயமடையச்செய்த 31 வயதான நபரை கொலை முயற்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விசாரணையாளர்களுக்கு இன்னும் தாக்குதலுக்கான உந்துதல் தெரியவில்லை என்று வழக்கறிஞர் லாரே பெக்குவா கூறினார்.
31 வயதான சந்தேகநபரின் அடையாளம் இன்னும் முறையாக நிறுவப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
AP
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது சுடப்பட்டு காயமடைந்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் போதுமான அளவு முன்னேற்றம் அடைந்ததால் மீண்டும் காவலில் எடுத்து முறையான விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.
ஐரோப்பாவின் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்றான பாரிஸில் உள்ள Gare du Nord ரயில் நிலையத்தில் புதன்கிழமை இந்தத் தாக்குதல் நடந்தது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை, 6.45 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில், குறைந்தது 6 பேர் காயம் பட்டதாகவும், ஒருவர் கவலைக்கிடமாக யிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கைதான நபர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகளை புலனாய்வாளர்கள் நிராகரித்துள்ளனர்.