ஆண்டுக்கு 11 மில்லியன் சுற்றுலாப்பயணிகள்: பிரெஞ்சு நகரமொன்றின் மக்கள் கவலை
சுற்றுலாவை மட்டுமே நம்பியிருக்கும் நாடுகள் பல உண்டு. ஆனால், சமீப காலமாக, தங்கள் நகரத்துக்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள் என சில ஐரோப்பிய நகரங்களின் மக்கள் புகார் கூறும் செய்திகள் பரவலாக வரத் துவங்கியுள்ளன.
பிரெஞ்சு நகரமொன்றின் மக்கள் கவலை
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அமைந்துள்ளது Montmartre என்னுமிடம். இங்குள்ள தேவாலயங்கள் முதல் பல்வேறு விடயங்கள் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கின்றன.
ஆகவே, ஆண்டொன்றிற்கு சுமார் 11 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் Montmartre தெருக்கள் வழியாக பயணிக்கிறார்கள்.
Amélie போன்ற திரைப்படங்களும், Emily in Paris என்னும் தொலைக்காட்சித் தொடரும் அதிக சுற்றுலாப்பயணிகளை இங்கு ஈர்க்கத் துவங்கியுள்ளன.
சுற்றுலாப்பயணிகளுக்காக, வழக்கமான மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகளுக்கு பதிலாக உணவகங்களும் சிற்றுண்டி சாலைகளும் அமைக்கப்படுகின்றன.
ஆக, Montmartreஇல் வாழும் மக்கள் தங்கள் தெருக்கள் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழிவதாக கூறுவதுடன், உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளையும், தொழிலையும் இழக்கக்கூடும் என்னும் கவலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |