இளம்பெண்ணை சீரழித்துக் கொன்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய நபர்: பிரான்சிடம் ஒப்படைப்பு
பிரான்சில் கடந்த மாதம் இளம்பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்ததாக புலம்பெயர்ந்தோர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார்.
சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்
செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி, பிரான்ஸ் தலைநகரான பாரீஸில், Paris-Dauphine பல்கலைக்கழக மாணவியான Philippine (19) என்னும் இளம்பெண், வனப்பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அவரைக் கொலை செய்ததாக மொராக்கோ நாட்டவரான 22 வயது நபர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார்.
அந்த நபர் ஏற்கனவே பெண்களுக்கெதிரான மோசமான குற்றம் ஒன்றில் ஈடுபட்டு சிறை சென்றவர். நாட்டை விட்டு வெளியேற்றப்பட இருந்த அவர் சட்டவிரோதமாக பிரான்சில் வாழ்ந்துவந்துள்ளார்.
அந்த இளம்பெண்ணை சீரழித்துக் கொன்றுவிட்டு அவர் சுவிட்சர்லாந்துக்கு தப்பிய நிலையில், ஜெனீவா மாகாணத்தில் சுவிஸ் பொலிசார் அவரை செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி கைது செய்தார்கள்.
பிரான்சிடம் ஒப்படைப்பு
அந்த நபரை பிரான்சுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளை பிரான்ஸ் அதிகாரிகள் துவக்கினார்கள்.
ஆனால், அந்த நபர் பிரான்சுக்குத் திரும்ப எதிர்ப்பு தெரிவித்துவந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் பிரான்சுக்கு திரும்ப சம்மதித்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, நாளை அவர் பிரான்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |