பாரிஸ் முதியோர் காப்பகத்தில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் முதியோர் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கு 75க்கும் மேற்பட்ட முதியவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காப்பகத்தின் சலவை அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியதால், அங்கு பதற்றம் நிலவியது. தீயை கண்டதும் முதியவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த தீ விபத்தில் மூன்று முதியவர்கள் பரிதாபகரமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |