பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: ட்ரையத்லான் போட்டியில் படுகுழப்பம்: கண்ணீர் விட்ட வீராங்கனைகள்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ட்ரையத்லான் போட்டியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
ட்ரையத்லான் போட்டியில் படுகுழப்பம்
இம்முறை, ஒலிம்பிக் போட்டிகளில் ட்ரையத்லான் போட்டிகள் வீரர் வீராங்கனைகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.
ஏற்கனவே Seine நதி நீரின் தரம் தரம் திருப்திகரமாக இல்லாததால், இரண்டு முறை நீச்சல் பயிற்சிகளை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் ஒத்திவைத்தார்கள்.
ஒரு கட்டத்தில், நீச்சல், சைக்கிள் பந்தயம் மற்றும் ஓட்டப்பந்தயம் என மூன்று அம்சங்கள் கொண்ட ட்ரையத்லான் போட்டிகளை, நதி நீர் சுத்தம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, நீச்சலை விட்டு விட்டு, சைக்கிள் பந்தயம் மற்றும் ஓட்டப்பந்தயம் ஆகியவை மட்டுமே கொண்ட டூயத்லானாக ஆக்கிவிடலாமா என கூட போட்டி அமைப்பாளர்கள் யோசித்திருந்தார்கள்.
பின்னர் போட்டி துவங்கியும், நதியில் நீரோட்டம் பலமாக இருந்ததால் வீரர் வீராங்கனைகள் நீந்துவதில் பிரச்சினையை எதிர்கொள்ள்வேண்டியிருந்தது.
கண்ணீரில் வீராங்கனைகள்
இந்நிலையில், அவ்வப்போது மழை வேறு பெய்ய, ஈரமாகியிருந்த சாலைகள் காய்ந்ததைத் தொடர்ந்து வேறு சில பிரச்சினைகள் எழுந்தன.
ஓட்டம் மற்றும் சைக்கிள் பந்தயத்தின்போது பாதையிலிருந்த கற்கள் தடுக்கி வரிசையாக பல பெண்கள் கீழே விழுந்தார்கள்.
Guam தீவைச்சேர்ந்த வீராங்கனையான Manami Iijima சைக்கிள் ஓட்டும்போது கல் தடுக்கி கீழே விழ பார்வையாளர்களும் வர்ணனையாளர்களும் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஜேர்மனியின் Lisa Tertschம், பெல்ஜியம் நாட்டு வீராங்கனையான Jolien Vermeylenம் கீழே விழுந்து எழுந்து மீண்டும் சைக்கிள் ஓட்டத் துவங்க, பின்னர் பிரேசில் நாட்டவரான Vittoria Lopes தடுக்கி விழுந்தார்.
பிரான்சின் Leonie Periault சைக்கிளிலிருந்து விழ, பின்னர், நோர்வே நாட்டவரான Lotte Miller, கொலம்பியா வீராங்கனையனா Maria Carolina Velasquez Soto ஆகியோரும் தடுக்கி கீழே விழுந்தார்கள்.
லக்ஸம்பர்க் நாட்டு வீராங்கனையான Jeanne Lehair சைக்கிளிலிருந்து விழுந்து எழுந்து ஓரமாக உட்கார்ந்து அழத்துவங்க, பார்வையாளர்கள் அவரை தேற்றும் காட்சிகளைக் காணமுடிந்தது.
மொத்தத்தில், ட்ரையத்லான் படுகுழப்பமாக அமைந்ததாக பிபிசி வர்ணனையாளர் ஒருவர் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |