பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வாழ்வில் மறக்க முடியாத ஒரு பரிசு... ஒரு சுவாரஸ்ய தகவல்
2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற உள்ளன என்பது பெரும்பாலானோர் அறிந்த ஒரு விடயம்தான். ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்ய தகவல் உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மறக்க முடியாத ஒரு பரிசு...
ஆம், இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு, அவர்கள் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பரிசு கிடைக்க உள்ளது. அவர்கள் பிரான்ஸ் வரலாற்றின் ஒரு பகுதியை தங்களுடன் கொண்டு செல்ல இருக்கிறார்கள்.
பிரான்ஸ் என்றாலே நம்மில் பலருக்கு நினைவுக்கு வருவது ஈபிள் கோபுரம்தானே? இன்னமும் ஒரு முறையாவது ஈபிள் கோபுரத்தை நேரில் பார்த்துவிடமாட்டோமா என ஏங்குபவர்கள் உலகம் முழுவதுமே இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படியிருக்கும்போது, அந்த ஈபிள் கோபுரத்தில் ஒரு சிறு துண்டை வீட்டுக்குக் கொண்டு போகமுடிந்தால் எப்படி இருக்கும்?
ஒலிம்பிக் பதக்கங்களில் (உண்மையான) ஈபிள் கோபுரம்
உண்மைதான், இம்முறை ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்பட உள்ள பதக்கங்களில், ஈபிள் கோபுரத்தின் ஒரு சிறு துண்டு இணைக்கப்பட்டுள்ளது.
ஈபிள் கோபுரத்தைப் புதுபிக்கும்போதெல்லாம், அதிலிருந்து எடுக்கப்பட்ட உலோகத் துண்டுகளை பல ஆண்டுகளாக பத்திரப்படுத்தி வைத்துவந்திருகிறார்கள்.
அந்த உலோகத் துண்டுகள், தற்போது பதக்கங்களின் ஒரு பக்கத்தில் அறுங்கோண வடிவில் இணைக்கப்பட்டுள்ளன. ஆக, போட்டிகளில் வெற்றி பெறுவோர், பதகங்களுடன், அது எந்தப் பதக்கமாக இருந்தாலும் சரி, ஈபிள் கோபுரத்தின் ஒரு துண்டையும் சேர்த்து எடுத்துச் செல்ல இருக்கிறார்கள். அது மறக்கமுடியாத ஒரு பரிசுதானே!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |