ஒலிம்பிக் வீராங்கனைகளை மோசமாக புகைப்படம் எடுக்கும் நபர்களிடமிருந்த தப்ப புதிய கண்டுபிடிப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், நாளை மறுநாள் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ளன.
இந்நிலையில், ஒலிம்பிக் வீராங்கனைகளுக்கு பெரிதும் உதவும் விடயம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது ஒரு நிறுவனம்.
வீராங்கனைகளை மோசமாக புகைப்படம் எடுக்கும் நபர்கள்
மும்முரமாக விளையாடிக்கொண்டிருக்கும் விளையாட்டு வீராங்கனைகளின் உடை விலகும்போது, அதை புகைப்படம் எடுப்பதற்கென்றே காத்திருக்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.
விளையாட்டு மற்றும் பாலின பிரச்சினைகள் நிபுணரான, Josai பல்கலை பேராசிரியரான Rieko Yamaguchi என்பவர், பெண்கள் விளையாட்டுகள் தொடர்பில், இன்னமும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை சரி செய்யவேண்டிய நிலை உள்ளது என்கிறார்.
அதாவது, விளையாட்டை புகைப்படம் எடுக்க வருபவர்கள், விளையாட்டு வீரர்கள் விளையாடும்போதுதான் புகைப்படம் எடுப்பார்கள் அல்லவா?
ஆனால், சில புகைப்படக்காரர்கள், பெண்கள் சர்வீஸ் செய்யும்போதும், விளையாட்டின் இடையே தங்கள் இருக்கையில் அமர்ந்திருக்கும்போதும் மட்டும் புகைப்படம் எடுத்துவிட்டு, அவர்கள் விளையாடும்போது தூங்கிவிடுகிறார்கள்.
அதாவது, விளையாட்டு வீராங்கனைகள் உடல் தெரியும் விதத்தில் புகைப்படம் எடுப்பது மட்டுமே அவர்கள் நோக்கம். ஆக, இனி யார் யார் விளையாட்டுப் போட்டிகளின்போது கமெராவை கொண்டுவருவது என்பதற்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும் என்கிறார் பேராசிரியர் Rieko Yamaguchi
புதிய கண்டுபிடிப்பு
இந்நிலையில், தன் நாட்டு விளையாட்டு வீராங்கனைகள் மோசமாக புகைப்படம் எடுக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், ஜப்பான் நாடு புதிய வகை உடை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
அதாவது, புகைப்படக்காரர்கள் அகச்சிவப்பு கதிர் கமெராக்களைத்தான் (infrared cameras) பயன்படுத்துவார்களாம்.
ஆகவே, இந்த அகச்சிவப்பு கதிர்களை உறிஞ்சிக்கொள்ளும் வகையிலான ஒரு வகை துணியை Mizuno என்னும் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இந்த துணியில் உருவாக்கப்படும் உடைகளை விளையாட்டு வீராங்கனைகள் அணிந்து விளையாடும்போது, அவர்கள் உடை விலகினாலும், புகைப்படக்காரர்கள் அதை புகைப்படம் எடுத்தால், அந்த உடை கமெராவிலிருந்து வரும் அகச்சிவப்புக் கதிர்களை உறிஞ்சிக் கொள்வதால், புகைப்படத்தில் எதுவுமே மோசமாக தெரியாது.
அத்துடன், இந்த தயாரிப்புகளை இனி பொதுமக்கள் பயன்பாட்டுக்கும், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் Mizuno நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |