பிரான்சில் புலம்பெயர்தலைக் கொண்டாடவிருக்கும் ஒலிம்பிக் துவக்க விழா: ஒரு ரகசிய தகவல்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்கவிருக்கும் நிலையில், துவக்க விழா நிகழ்ச்சிகள் புலம்பெயர்தலைக் கொண்டாட இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மாறிய காட்சிகள்
கடந்த சில ஆண்டுகளாக, பிரான்சில் நடைபெற்ற சில விடயங்கள், குறிப்பாக, அரசியலில் நிகழ்ந்த சில மாற்றங்கள், புலம்பெயர்தலுக்கெதிரானவையாக அமைந்தன.
இஸ்லாமியர்கள் அணியும் பர்தாவுக்கு பள்ளிகளில் தடை அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அந்த தடை பின்னர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கும் நீட்டிக்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும் முன் கூட, பாரீஸில் வாழ்ந்துவந்த புலம்பெயர்ந்தோர் பலர் வெவ்வேறு கிராமங்களுக்கு இடம் மாற்றப்பட்டது நினைவிருக்கலாம்.
புலம்பெயர்தலைக் கொண்டாடவிருக்கும் ஒலிம்பிக்
இந்நிலையில், பிரான்சின் இந்த மாற்றத்தைக் கேலி செய்யும் வகையில், வேறுபாடுகளை, அதாவது, பலதரப்பட்டவர்கள் வாழும் பிரான்ஸ் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டாடும் வகையில், ஒலிம்பிக் துவக்க விழா அமைய இருப்பதாக ஒலிம்பிக் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆக, ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சிகள் புலம்பெயர்தலைக் கொண்டாட இருப்பதாக ஒலிம்பிக் துவக்க விழா அமைப்பாளர்களான Thomas Jolly மற்றும் Leila Slimani ஆகியோர் தெரிவிக்கிறார்கள்.
ஆனால், அவை என்ன நிகழ்ச்சிகள், என்ன திட்டமிடப்பட்டுள்ளது என்று கேட்டால், வாயை இறுக மூடிக்கொள்கிறார் Jolly. நிகழ்ச்சிக்கான ஒத்திகை கூட ரகசிய இடங்களில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு முந்தைய தினம் இறுதியாக ஒரு ஒத்திகை நடக்கும். அதுகூட, ரகசியம் காப்பதற்காக இம்முறை நடத்தப்படவில்லை.
அப்படி என்னதான் செய்யப்போகிறார்கள்? சரி, இன்னும் இரண்டு நாட்கள்தானே, பொறுத்திருந்துதான் பார்ப்போமே!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |