ஒலிம்பிக் போட்டிகள் எப்போது துவங்குகின்றன? தொலைக்காட்சியில் எப்போது காணலாம்?
பாரீஸ் தலைநகர் பாரீஸில், உள்ளூர் நேரப்படி இன்று இரவு 7.30 மணியளவில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ளன.
தொலைக்காட்சியில் எப்போது காணலாம்?
இந்திய நேரப்படி, இன்று, அதாவது, வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவை தொலைக்காட்சிகளில் காணலாம்.
பாரீஸிலுள்ள Jardin de Plantes என்னுமிடத்தின் அருகில், Seine நதியில், சுமார் 100 படகுகளுடன் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழா பவனி துவங்க இருக்கிறது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,000 விளையாட்டு வீரர்கள் Seine நதியில் படகுகளில் பவனி வர இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஒலிம்பிக் அமைப்பு, இதற்கு முன் நிகழ்ந்த ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பொன்றை சமூக ஊடகமான எக்ஸில் வெளியிட்டுள்ளது.
It's the final countdown until the @Paris2024 Olympic Opening Ceremony. ⏳👀
— The Olympic Games (@Olympics) July 25, 2024
Previous editions have delivered many incredible memories, including... sambas, running through the clouds, and Mr Bean. What are your favourite opening ceremony moments?#Olympics #Paris2024 #LastFive pic.twitter.com/TobxAeud8V
ஒரு கவலைக்குரிய செய்தி என்னவென்றால், பாரீஸில் மேகமூட்டமாக உள்ளதால், ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சிகளுக்கு மழையால் இடையூறு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
என்றாலும், மழை பெய்தாலும், ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சிகள் எந்த மாற்றமுமின்றி நடைபெறும் என்றும் சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |