பாரீஸ் ஒலிம்பிக்: பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தயார் நிலையில் 'Plan B'
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின்போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமானால், அதை சமாளிக்க மாற்று ஏற்பாடுகள் கைவசம் இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
தயார் நிலையில் 'Plan B'
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழா, முதன்முறையாக விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு பதிலாக, Seine நதியில் நடைபெற உள்ளது.
Florian Hulleu / AFP - Getty Images
ஜூலை மாதம் 26ஆம் திகதி, ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழாவின்போது, Seine நதியில் 160 படகுகளில் 10,500 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பவனி வர உள்ளார்கள்.
உக்ரைன் போர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவும் சூழலில், இத்தகைய திட்டத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதை மறுப்பதற்கில்லை.
Anne-Christine Poujoulat / AFP - Getty Images
ஆகவே, Seine நதியில் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழா நடைபெறும் நிலையில், அதற்கு ஏதேனும் அச்சுறுத்தல் அபாயம் ஏற்படுமானால், அதற்கு மாற்றாக 'Plan B' மட்டுமல்ல, 'Plan C' கூட தங்கள் கைவசம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.
அதாவது, Seine நதிக்கு பதிலாக, ஈபிள் கோபுரத்தின் எதிரே உள்ள Trocadero சதுக்கம் அல்லது பிரான்சின் தேசிய விளையாட்டு மைதானமான Stade de Franceஇல் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்கவிழாவை நடத்த, மாற்றுத் திட்டம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் மேக்ரான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |