பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நதியில் மோசமான கிருமிகள்: மாற்று ஏற்பாடுகள் தயார்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்னும் சில வாரங்களில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில், ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சிகளும், நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ள நதியில் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நதியில் மோசமான கிருமிகள்
ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சிகளும், நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ள Seine நதியில், ஈ.கோலை மற்றும் எண்டிரோகாக்கை என்னும் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கிருமிகள் நீரில் இருக்கிறது என்றால், அந்த நீரில் கழிவு நீர் கலந்துள்ளது என்று பொருள் ஆகும்.
கடந்த மாத இறுதியில் நதி நீரை ஆய்வகத்தில் பரிசோதித்ததில், மனிதக்கழிவில் காணப்படும் அந்த இரண்டுவகை கிருமிகளும் நதி நீரில் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.
இதே நிலை நீடிக்குமானால், அந்த நதியில் நீச்சல் போட்டிகள் நடத்துவது சரியானதாக இருக்காது. இளம் வயதினருக்கு போதுமான அளவில் நோய் எதிர்ப்பு சக்த் இருக்குமென்றாலும், அவர் நீந்தும்போது இந்தக் கிருமிகளை அவர்கள் உட்கொள்ள நேரிடலாம். சிலருக்கு நோய்கள் ஏற்படக்கூடும்.
பிளான் B
மேலும், மழை பெய்து நதி நீரின் அளவு அதிகரிக்குமானால், இந்த கிருமிகளின் அளவு அதிகரிக்கும் அபாயமும் உள்ளது.
ஆகவே, அப்படி ஒரு நிலை ஏற்படுமானால், நீச்சல் போட்டிகளை வேறு இடத்தில் நடத்த திட்டமிட்டுவருவதாக விளையாட்டுப் போட்டிகளை நடத்த இருக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |