பாரிஸ் நகர பூங்காவில் பீதியில் உறையவைத்த சம்பவம்: வெளிவரும் பகீர் பின்னணி
பாரிஸ் நகர பூங்கா ஒன்றில் பெண்ணின் வெட்டப்பட்ட தலை மீட்கப்பட்ட சம்பவத்தில், தற்போது அவர் கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Buttes-Chaumont பூங்காவில் மறைவு
பாரிஸ் 19ம் வட்டாரத்தில் உள்ள Buttes-Chaumont பூங்காவிலேயே வெட்டப்பட்ட பெண்னின் தலை கண்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது 50 வயதான Youcef Matoug தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தமது மனைவி 46 வயதான Assia Matoug என்பவரை கொலை செய்து, உடலை பல துண்டாக வெட்டி Buttes-Chaumont பூங்காவில் மறைவு செய்தாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான Assia Matoug காணாமல் போனதாக கூறி பிப்ரவரி 6ம் திகதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவரது அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்ட நிலையில், திடீரென்று Buttes-Chaumont பூங்காவில் அவர் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. ஜனவரி 30ம் திகதி தமது மனைவியை கொலை செய்ததாக கூறும் Youcef Matoug, பின்னர் உடலை துண்டாக வெட்டி Buttes-Chaumont பூங்காவில் மறைவு செய்துள்ளார்.
பூங்கா ஊழியர்கள்
தமது மனைவியின் இறுதி நாட்கள், பாரிஸ் நகரின் சிறந்த பூங்காக்களில் ஒன்றில் முடிவடைய வேண்டும் என தாம் விரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Assia Matoug காணாமல் போனதாக சுமார் 6 நாட்களுக்கு பின்னர் தான் அவரது கணவர் புகார் அளித்துள்ளார். இதுவே பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
@rex
பிப்ரவரி 13ம் திகதி தான் பூங்கா ஊழியர்கள் சிலர் பெண் ஒருவரின் இடுப்பு பகுதியை பை ஒன்றில் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். தொடர்ந்து பொலிசார் முன்னெடுத்த தேடுதல் மற்றும் விசாரணையில், தலை ஒன்று சிக்கியது.
குறித்த பூங்காவானது குடும்பங்கள் அதிகமாக பயன்படுத்தப்படும் பகுதி என்பதுடன், பிரெஞ்சு குற்றவியல் திரைப்படங்களுக்கான இடமாகப் புகழ்பெற்றதாகும். Buttes-Chaumont பூங்கா பகுதியானது 1760 வரையில் தூக்கிலிடப்பட்ட குற்றவாளிகளின் உடல்களை மரணதண்டனைக்குப் பிறகு காட்சிப்படுத்தப்பட்ட இடமாகும்.
1860களில் இப்பகுதி பூங்காவாக உருவாக்கப்பட்டது. மேலும், 1974ல் Marseille Contract என்ற திரைப்படமும் 1913ல் The Murderous Corpse என்ற திரைப்படமும் இப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.