அமைதியாக நடந்த பேரணி..காவல் துறை நடத்திய அடக்குமுறை: ஜனநாயகம் சீர்குலைந்ததாக மக்கள் குற்றச்சாட்டு!
பிரான்ஸ் நாட்டில் பாராளுமன்ற வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய மாற்றத்திற்கான மசோதா வெளியிட்டதற்காக நாடு முழுவதும் கடந்த ஒரு மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஓய்வூதிய மசோதா சட்டம்
பிரான்ஸில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயதை 62லிருந்து 64 ஆக உயர்த்துவதற்கு அரசாங்கம் முடிவெடுத்ததை தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
@Reuters
நாடு முழுவதும் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருந்த இப்போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை காவல்துறையின் அடக்குமுறையால் பூகம்பமாக வெடித்தது.
காவல்துறை அராஜகம்
பாரீஸ் நகரில் சுமார் 7000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் களமிறங்கினர்.
பாரீஸில் உள்ள கான்கார்ட் சதுக்கத்திற்கு அருகே குப்பை குவியல்கள் மற்றும் பலகைகளை ஆர்பாட்டகாரர்கள் தீ வைத்து எரித்தனர்.
@afp
இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர், மேலும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க தண்ணீர் பீரங்கி சுடப்பட்டது.
இம்மானுவேல் மீது குற்றச்சாட்டு
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸில் நடைபெற்ற (Yellow Vests) என்று அழைக்கப்படும் போராட்டத்திற்குப் பிறகு, தற்போது வளர்ந்து வரும் இப்போராட்டத்தினால் ஏற்பட்டுள்ள அமைதியின்மை மற்றும் வேலைநிறுத்தங்கள் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அதிகாரத்திற்கு மிகப்பெரிய சவாலை கொடுத்துள்ளது.
Life expectancy is falling but the age you are allowed to retire & access your state pension is rising.
— Howard Beckett (@BeckettUnite) March 16, 2023
In France, tonight, ordinary people are fighting back. Credit to them.pic.twitter.com/3Oh8Smevj0
"மக்ரோன், ராஜினாமா!" மற்றும் "மக்ரோன் ஆட்சி உடையப் போகிறது, நாங்கள் வெல்லப் போகிறோம்" என்று தெற்கு பாரீஸில் உள்ள பிளேஸ் டி'இட்டாலியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டுள்ளனர்.
@ap
மேலும் மக்களது வாக்கெடுப்பை பெறாமல் ஓய்வூதிய மசோதாவை சட்டமாக்குவது ஜனநாயத்திற்கு எதிரானதென மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.