பரபரப்பான பாரிஸ் ரயில் நிலையத்தில் பயணிகளை நடுங்க வைத்த சம்பவம்: காயங்களுடன் தப்பிய மூவர்
பாரிஸ் நகரில் அமைந்துள்ள Gare de Lyon ரயில் நிலையத்தில் திடீரென்று ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவத்தில் மூவர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாட்டவர்
தொடர்புடைய தாக்குதல்தாரியை துரிதமாக செயல்பட்ட பொலிசார் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தாக்குதல்தாரி ஆப்பிரிக்க நாட்டவர் என்றே கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி பகல் 8 மணியளவில் தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
@ap
மிகவும் பரபரப்பான Gare de Lyon ரயில் நிலையத்தில் இருந்து உள்ளூர் ரயில்கள் மற்றும் இத்தாலி, சுவிஸ் பகுதிகளுக்கு செல்லும் ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது.
இத்தாலியில் பதிவு செய்த
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், எஞ்சிய இருவர் லேசான காயங்களுடன் தப்பியதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@getty
மேலும், தாக்குதல்தாரி சம்பவத்தின் போது மத அடிப்படையிலான எந்த முழக்கமும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், இத்தாலியில் பதிவு செய்த ஓட்டுனர் உரிமம் ஒன்றை பொலிசாரிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |