பிரான்ஸ் நகரமொன்றில் ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து
பிரான்ஸ் தலைநகர் பாரீஸுக்கு அருகே பேருந்து ஒன்று ஆற்றுக்குள் பாய்ந்த சம்பவம் ஒன்று கவனம் ஈர்த்துள்ளது.
ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து
சாரதி பயிற்சி மேற்கொண்டுவரும் பெண்ணொருவர், தன் பயிற்சியின் இறுதி கட்டத்தின்போது பேருந்து ஒன்றை செலுத்திக்கொண்டிருந்திருக்கிறார்.

பாரீஸுக்கு தெற்கே 20 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள Juvisy-sur-Orge என்னுமிடத்துக்கு வரும்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, அங்கு நின்ற ஒரு காரையும் இழுத்துக்கொண்டு Seine ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.
அந்தப் பேருந்தில், பயிற்சி அளிக்கும் மூத்த பயிற்சியாளர் ஒருவர், அந்த பெண் சாரதி மற்றும் இருவர் இருந்துள்ளனர்.

பேருந்து தண்ணீருக்குள் பாய்ந்த தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து நடவடிக்கையில் இறங்க, பேருந்திலிருந்த நான்கு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
பின்னர் ஆற்றுக்குள் விழுந்த பேருந்தும், காரும் மீட்கப்பட்டுள்ளன.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. என்றாலும், இனி இப்போதைக்கு அந்தப் பெண் ஓட்டுநர் உரிமம் பெறுவது கடினம்தான்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |