இளவரசி டயானா கார் சென்ற அதே வேகத்தில் பாரிஸ் சுரங்க பாதையில் விரைந்த ஹரி: சொன்ன காரணம்
தமது தாயார் இளவரசி டயானா இறந்த பாரிஸ் நகர சுரங்க பாதையில், அதே வேகத்தில் வாகனம் செலுத்தி, அந்த தருணத்தை அனுபவிக்க முயன்றதாக ஹரி வெளிப்படுத்தியுள்ளார்.
டயானாவின் மரணம்
வெளியாகவிருக்கும் தமது நினைவுக்குறிப்புகள் புத்தகத்தில், தாயார் டயானாவின் மரணம் தொடர்பில் ஹரி தமது கருத்தை பதிவு செய்துள்ளார்.
@getty
மட்டுமின்றி, ஆவிகளுடன் பேசுபவர்கள் ஊடாக டயானாவை தொடர்பு கொண்டதாகவும் ஹரி கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை வெளியாகவிருக்கும் குறித்த புத்தகத்தின் சில பக்கங்கள் வெளியாகி தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
பாரிஸ் நகரில் ரக்பி உலகக் கோப்பை காண சென்ற 23 வய்தான ஹரி தமது சாரதியிட்ம், டயானா சாலை விபத்தில் கொல்லப்பட்ட அந்த சுரங்க பாதை வழியாக செல்ல வேண்டும் என கேட்டுகொண்டதாக அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மணிக்கு 65 மைல்கள் வேகத்தில்
அந்த சுர்ங்க பாதையில் மணிக்கு 65 மைல்கள் வேகத்தில் செல்ல சாரதியை கேட்டுகொண்டதாகவும், டயானா இறக்கும் முன்னர் அதே வேகத்தில் தான் அவரது வாகனமும் பாய்ந்துள்ளது என்கிறார் ஹரி.
@ap
மேலும், சில சுரங்க பாதைகள் ஆபத்தானவை என்பதை நாம் ஒருமுறை பயணித்தாலே புரிந்து கொள்ளலம். ஆனால் பாரிஸ் சுரங்க பாதை அப்படியான எந்த சிக்கலும் இல்லாத குறுகிய ஒன்று என கூறியுள்ள ஹரி,
பாரிஸ் பயணத்திற்கு பிறகு நடந்தவற்றை தமது சகோதரர் வில்லியத்திடம் பகிர்ந்து கொண்டதாகவும், அவரும் அந்த பாதையில் ஒருமுறை பயணிக்க ஒப்புக்கொண்டதாகவும் ஹரி தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த விபத்து தொடர்பில் வெளிவராத பல தகவல்கள் இருப்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம் என்கிறார் ஹரி.