தானாக நகர்ந்து வீட்டிற்குள் நுழைந்த லொறி! பரிதாபமாக உயிரிழந்த தொழிலாளி
தமிழக மாவட்டம் திண்டுக்கலில் லொறி ஒன்று வீட்டிற்குள் புகுந்ததில் தொழிலாளி பலியான சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
கூலித் தொழிலாளி பலி
திண்டுக்கல் மாவட்டம் தோமையார்புரம் ஏ.டி.காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (37). கூலித்தொழிலாளியான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் ஜஸ்டின் தனது வீட்டில் மனைவி மற்றும் இரு மகன்களுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அரிசி ஏற்றிக்கொண்டு வந்த லொறி ஒன்று தானாக நகர்ந்து வீட்டின் சுவரை இடித்தது.
இதில் தூங்கிக்கொண்டிருந்த ஜஸ்டின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். அவரது மனைவி பிரேமா மற்றும் இரண்டு மகன்களும் படுகாயம் அடைந்தனர்.
Dailythanthi
அதிக எடை கொண்ட லொறி
இச்சம்பவம் குறித்த விசாரணையில், பழனி என்ற நபர் 25 டன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லொறியை ஓட்டி வந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து தேனிக்கு பயணித்த அவர், தோமையார்புரம் அருகே லொறியை நிறுத்தியுள்ளார். லொறி முதல் கியரில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், கீழே இறங்கிய பழனி தேனிக்கு செல்லும் சாலை குறித்து சிலரிடம் கேட்டுக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது அதிக எடை கொண்ட லொறி தானாக நகர்ந்து பள்ளத்தை நோக்கி இறங்கியது. ஆனால் பழனியால் நிறுத்த முடியாததால் வீட்டுக்குள் புகுந்து ஜஸ்டின் உயிரிழந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |