பார்க்கிங் வசதி இருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் - சென்னையில் வரும் புதிய சட்டம்
சென்னையில் கார் வாங்கும் போது பார்க்கிங் வசதி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வர உள்ளது.
சென்னையில் கார்
சென்னையில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என பல்வேறு பொதுப் போக்குவரத்து இருந்தாலும், மக்கள் தங்கள் வசதிக்காக பைக், கார் போன்ற சொந்தமாக வாகனங்களை வைத்துக்கொள்வதை விரும்புவார்கள்.
2022 ஆம் ஆண்டில் சென்னையில் 90 லட்சம் கார்கள் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்க கூடும்.
ஆனால் இது பலரும் காரை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாமல் சாலை ஓரங்களில் காரை நிறுத்துகிறார்கள். இதனால் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
பார்க்கிங் கட்டாயம்
இந்நிலையில் சென்னையில் புதிதாக கார் வாங்குபவர்கள், காரை பதிவு செய்யும் போது அதற்கான பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்றை இணைப்பது கட்டாயமாக்க வேண்டும் என தமிழக அரசிற்கு சென்னை பெருநகரப் போக்குவரத்து ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இதன்படி, ஒருவர் எத்தனை காரை பதிவு செய்ய விரும்புகிறாரோ, அத்தனை காருக்குமான பார்க்கிங் ஆவணத்தை காட்ட வேண்டும்.
மேலும், சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும், அதிக தேவை, நடுத்தர தேவை மற்றும் குறைந்த தேவை என 3 வகையான பார்க்கிங் இடங்கள் உருவாக்கப்பட உள்ளது. தேவையின் அடிப்படையில் அதன் விலைகள் மாறும்.
அகலமான சாலைகளில் பார்க்கிங் இடங்கள் உருவாக்கப்பட்டு, மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படையில் அந்த இடங்கள் ஏலம் விடப்படும். குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டிடங்களில் உள்ள பார்க்கிங் இடங்களை குத்தகைக்கு விடலாம்.
மேலும், மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் பொதுமக்களுக்கான பார்க்கிங் இடத்தை உருவாக்க வேண்டும். இதில் 20% மின்சார கார்களின் சார்ஜிங் ஸ்டேஷனுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |