பிரித்தானியாவில் இராணுவத்தை விட அதிகளவில் பார்க்கிங் வார்டன்கள்: அதிகரித்த லாபம்..என்ன காரணம்?
பிரித்தானியாவில் இப்போது பார்க்கிங் வார்டன்களின் எண்ணிக்கை முழுநேர வீரர்களை விட அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆண்டுக்கு 2.3 பில்லியன்
நாடு முழுவதும் பிரித்தானியாவின் தெருக்களில் ரோந்து செல்லும் சுமார் 82,000 போக்குவரத்து அமலாக்க அதிகாரிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று பிரித்தானிய பார்க்கிங் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள்
அங்கு சாரதிகள் மீதான அபாரதங்களும், கட்டணங்களும் ஆண்டுக்கு 2.3 பில்லியனை எட்டுவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
இது பிரித்தானிய இராணுவத்தில் வழக்கமான வீரர்களின் வழக்கமான எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 73,490 முழுநேர வீரர்கள் இருக்கிறார்கள்.
நிதி வெட்டுக்கள் சமீபத்தில் பிரித்தானியாவின் இராணுவத்தை பாதித்த போதிலும், கவுன்சில்கள் தங்கள் பார்க்கிங் வார்டன்களின் படைகளில் இருந்து பெரும் லாபத்தை ஈட்டுவது தெரிகிறது.
சாரதிகளிடமிருந்து வரும் வருவாய்
நாடு தழுவிய லாபம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 961 பவுண்டு மில்லியனில் இருந்து சமீபத்திய ஆண்டில் சுமார் 1.1 பில்லியனாக உயர்ந்துள்ளது.
இதற்கு காரணம், பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்ட கவுன்சில்கள் கட்டணங்களை உயர்த்துவதனால் பார்க்கிங் அனுமதிகள், டிக்கெட்டுகள் மற்றும் அபராதங்களுக்கான சாரதிகளிடமிருந்து வரும் வருவாய், இரண்டு ஆண்டுகளில் சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரங்களை தெரிவிப்பதுதான் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள கவுன்சில்கள் தெருக்களில் பார்க்கிங் கட்டணங்கள் மூலம் 1.4 பில்லியன் பவுண்டுகளையும், கவுன்சில் நடத்தும் கார் பார்க்கிங் மூலம் 876 மில்லியன் பவுண்டுகளையும் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ தரவு காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |