அபாயகரமான நிலையில் நாடாளுமன்றம்: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை
Parliament risks 'catastrophic event' without urgent renovation, MPs warn: பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடம், உடனடியாக புதுப்பிக்கப்படாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளார்கள்.
பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடம், அபாயகரமான நிலையில் உள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அபாயகரமான நிலையில் நாடாளுமன்றம்
வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகை என்னும் கட்டிடமே, பிரித்தானிய நாடாளுமன்றமாக செயல்பட்டுவருகிறது.
இந்நிலையில், அந்தக் கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதாக, The Public Accounts Committee (PAC) என்னும் அமைப்பின் உறுப்பினர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

PAC அமைப்பின் தலைவரான Sir Geoffrey Clifton-Brown, நாடாளுமன்றக் கட்டிடத்தை உடனடியாக புதுப்பிக்காவிட்டால், நாடாளுமன்றத்தை மன்னர் துவக்கிவைக்கும் நாளில் திடீரென மின்தடை ஏற்பட்டு நாடாளுமன்றமே இருளில் மூழ்குவது போன்ற தர்மசங்கடமான நிலை ஏற்படலாம் என்கிறார்.
அத்துடன், பிரான்சிலுள்ள Notre-Dame தேவாலயத்தில் தீப்பற்றியபோது, அந்த செய்தி உலகெங்கும் பரவியது போல, பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு ஏதாவது நடந்துவிட்டால், அதனால் நமது பாரம்பரியம் அவமானத்துக்குள்ளாவதுடன், காயங்கள் அல்லது உயிர் பலியும் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார் Sir Geoffrey.
அத்துடன், தொடர்ந்து விலைவாசி அதிகரித்துவரும் நிலையில், நாடாளுமன்றத்தை புதுப்பிப்பதை தள்ளிவைத்துக்கொண்டே சென்றால், அதற்கான செலவும் அதிகமாகிக்கொண்டேதான் செல்லும் என்றும் கூறியுள்ளது PAC அமைப்பு.
