120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகள்: நாடாளுமன்றம் வரை சலசலப்பை ஏற்படுத்திய விவகாரம்
Ports denied request to land 120 migrants in RNLI boats: 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு துறைமுகங்கள் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்திலுள்ள துறைமுகங்கள் இரண்டிற்கு 120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விடயம் நாடாளுமன்றம் வரை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
120 புலம்பெயர்வோருடன் வந்த படகுகள்
இங்கிலாந்தின் Isle of Wight தீவினருகே 120 பேருடன், பாரம் தாங்காமல், மெல்ல நகர்ந்துகொண்டிருந்த புலம்பெயர்வோர் படகொன்றை, RNLI (Royal National Lifeboat Institution) என்னும் தொண்டு நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு படகுகள் கவனித்துள்ளன.

உடனடியாக அந்த படகிலிருந்தவர்கள் தங்கள் படகுகளில் ஏற்றிக்கொண்டு கரை திரும்ப முயன்றுள்ளன அந்த RNLI அமைப்பின் படகுகள்.
ஆனால், இங்கிலாந்திலுள்ள போர்ட்ஸ்மௌத் துறைமுகமோ, சௌதாம்டன் துறைமுகமோ, தங்களுக்கு அனுமதியளிக்கவில்லை என RNLI அமைப்பு கூறுகிறது.
கடைசியாக, லாங்ஸ்டோன் துறைமுகத்துக்கு வந்தால், அங்கு புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு சாலையை மறித்துக்கொண்டு நின்றதாகவும் கூறுகிறது RNLI அமைப்பு.

இந்த விடயம் நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது.
போர்ட்ஸ்மௌத் நகர கவுன்சில் தலைவரான ஸ்டீவ் பிற், உள்துறை அலுவலகத்தில் சரியான திட்டமிடல் இல்லாததால் நிகழ்ந்த சம்பவங்களுக்கு உள்துறை அலுவலகம் பதில் கூறவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.
அத்துடன், கோஸ்போர்ட் நாடாளுமன்ற உறுப்பினரான Dame Caroline Dinenage, Solent பகுதியிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன நடக்கிறது என்பது குறித்த தகவல்களை சேகரிக்க முயன்றோம், உள்துறை அலுவலக தரப்பிலிருந்து மௌனம் மட்டுமே கிடைத்தது என்கிறார்.

ஆகவே, பதற்றத்தையும் பயத்தையும் கட்டுப்படுத்தும் நிலையில் நாங்கள் இல்லை என்கிறார் அவர்.
அதாவது, கடலில் பயணித்துக்கொண்டிருந்த அந்த 120 புலம்பெயர்ந்தோர் எதற்காக சம்பந்தப்பட்ட துறைமுகங்களுக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.
அதற்கு உள்துறை அலுவலகம் அனுமதியளித்ததா, ஏன் அந்த துறைமுகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏன் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு தகவல் அளிக்கப்படவில்லை என கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உள்துறை அலுவலகத் தரப்பில் திருப்திகரமான பதிலிலில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |