பரோட்டா பார்சல் வாங்கி பிரித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உணவகம் ஒன்றில் வாங்கிய பரோட்டா பார்சலில் பாம்புத் தோல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருவனந்தபுரம் நெடுமாங்காடு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியா என்பவர் பரோட்டா பார்சல் வாங்கியுள்ளார். அதன் பின்னர் வீட்டிற்கு வந்து அவர் பார்சலை பிரித்தபோது, பரோட்டாவை பேக் செய்யப் பயன்படுத்திய செய்தித்தாள் ஒன்றில் பாம்புத் தோல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இதுதொடர்பாக அவர் நகராட்சி நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்பு துறையிடம் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து உணவகத்திற்கு விரைந்த உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மோசமான நிலையில் உணவகம் இருந்ததும், சமையலறையில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருந்ததும் தெரிய வந்தது. பின்னர் மோசமான சூழலில் உணவகத்தை நடத்தியதற்கு விளக்கம் கேட்டு notice அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீதமுள்ள உணவுகள் அனைத்தும் ஆய்வகத்திற்கு அனுப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.