Layer parotta: இடியாப்ப அச்சு போதும்.., சுலபமாக லேயர் பரோட்டா செய்யலாம்
பரோட்டா என்பது ரோட்டு கடைகளிலும், பிரபல உணவகங்களிலும் உள்ள ஒரு பிரபலமான உணவாகும்.
ஆனால் இதற்கு மா பிணைந்து அதை மெலிதாக தேய்த்து சுட்டு எடுப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.
அந்தவகையில், இடியாப்ப அச்சு வைத்து பூப்போல லேயர் பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 2 கப்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- சுடு தண்ணீர்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு சேர்த்து கலந்து அதில் சுடு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ளவும்.
பின் இதில் எண்ணெய் சேர்த்து நன்கு பிணைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து பிணைந்து மாவை ஒரு இடியாப்ப அச்சில் போட்டு வட்டமாக பிழிந்துக்கொள்ளவும்.
பின் இதை நன்கு கையால் அழுத்தம் கொடுத்து வட்டமாக அழுத்திக்கொள்ளவும்.
இறுதியாக அடுப்பில் ஒரு தவாவை வைத்து அதில் தேய்த்த பரோட்டாவை சுட்டு எடுத்தல் சுவையான லேயர் பரோட்டா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |