கோபத்தில் மைக்கை தூக்கி வீசிய பார்த்திபன்.. அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரகுமான்! வீடியோ
திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் ஏ.ஆர்.ரகுமான் முன்பு நடிகர் பார்த்திபன் மைக்கை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகரும், இயக்குனருமான ஆர்.பார்த்திபன் இயக்கியுள்ள 'இரவின் நிழல்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
முதல் பாடலை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டார். பாடலை பார்த்திபன் ஒலிக்குமாறு கூறியபோது மைக் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறப்பட்டது. இதனால் கோபமடைந்த அவர் மைக்கை தூக்கி வீசினார். அதனை எதிர்பாராத ஏ.ஆர்.ரகுமான் சற்று அதிர்ச்சியடைந்தார்.
https://www.youtube.com/watch?v=nAh9thqBWVo
அதனைத் தொடர்ந்து, மேடையில் பேசிய பார்த்திபன் தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார். இந்த சம்பவத்தால் விழா மேடையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
முதல் முறையாக இரவின் நிழல் படத்தின் மூலம் பார்த்திபன் - ஏ.ஆர்.ரகுமான் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        