லண்டனின் சில பகுதிகள் நிரந்திரமாக கடலுக்கடியில் மூழ்கும்! அபாயத்தை விவரிக்கும் நாசா வரைபடம்
நாசா உருவாக்கிய புதிய மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வரைபடத்தின் படி, 2030-க்குள் லண்டனின் சில பகுதிகள் கடலுக்கடியில் மூழ்க வாய்ப்பு இருப்பதை காட்டுகிறது.
நாசா உருவாக்கிய புதிய மென்பொருளைப் பயன்படுத்தி, எதிர்வரும் ஆண்டுகளில் கடல் மட்ட உயர்வு காரணமாக உலகெங்கிலும் உள்ள பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதை விவரிக்கும் ஒரு interactive வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வரைப்படம் 2020 முதல் 2150 வரை கடல் மட்ட உயர்வு மாற்றங்களை காட்டுகிறது. இது பனிப்பாறை உருகுவது மற்றும் கடல் டிரான்ஸ்-ஓசியானிக் நீரோட்டங்களின் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
வரைபடத்தின்படி, இப்போது வழக்கமான வெள்ளத்தால் அச்சுறுத்தப்படுகின்ற மத்திய லண்டன் பகுதிகளில் சில பகுதிகள் நிரந்தரமாக கடலுக்கடியில் மூழ்கும் என காட்டுகிறது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் புவி வெப்பமடைதல் சராசரி ஆண்டு வெப்பநிலையில் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது, இது பனிப்பாறைகள் உருகுவதற்கும் கடல் மட்டம் அதிகரிப்பதற்கும் காரணமாகிறது.
இந்த மாற்றங்கள் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளின் இயல்பான சமநிலைக்கு இடையூறு விளைவிக்கிறது.
மழை காலங்களை மாற்றி சீர்குலைக்கிறது, வெப்பநிலை முரண்பாடுகளை ஏற்படுத்துகிறது மற்றும் சூறாவளி, வெள்ளம் மற்றும் வறட்சி போன்ற இயற்கை பேரழிவுகளின் அதிர்வெண்ணை அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளனர்.