இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினருக்கு கனடாவில் மீண்டும் ஒரு அவமதிப்பு
கனடாவில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், மீண்டும் ஒரு அவமதிப்பை எதிர்கொண்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிட தடை
கனடாவில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினரான சந்திரா ஆர்யா தேர்தலில் போட்டியிட ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தடை விதித்துள்ளது.
I have been informed by the Liberal Party that my nomination as the candidate for the upcoming federal election in Nepean has been revoked.
— Chandra Arya (@AryaCanada) March 21, 2025
While this news is deeply disappointing, it does not diminish the profound honour and privilege it has been to serve the people of Nepean —… pic.twitter.com/Kw5HcsRf6Q
ஒன்ராறியோவிலுள்ள Nepean தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்யாவுக்கு, இம்முறை தேர்தலில் போட்டியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
2015ஆம் ஆண்டு முதல் தான் தனது தொகுதி மக்களுக்காக முழுமூச்சுடன் உழைத்துவருவதாக தெரிவித்துள்ள ஆர்யா, இந்த செய்தி தனக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே லிபரல் கட்சித் தலைமைக்காக போட்டியிட முயன்றபோதும் ஆர்யாவுக்கு லிபரல் கட்சி அனுமதி மறுத்துவிட்டது நினைவிருக்கலாம்.
First and foremost, I want to extend my heartfelt gratitude to the hundreds of volunteers across Canada who have worked tirelessly, day and night, over the past two weeks to mobilize support for my Liberal leadership campaign. Your unwavering dedication inspires me.
— Chandra Arya (@AryaCanada) January 26, 2025
I am deeply… https://t.co/EnR1u9ZFAt pic.twitter.com/F4Fk5sjDSl
காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்துவருபவரான ஆர்யாவுக்கு, அதன் காரணமாக கனடாவில் எதிர்ப்பு நிலவுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |