ரூ.55 கோடி நன்கொடை பெற்ற அறியப்படாத கட்சி! மும்பை தொகுதியில் போட்டி
எந்த வித செயல்பாட்டிலும் ஈடுபடாமல் 55 கோடி ரூபாய் அளவுக்கு நன்கொடை பெற்ற கட்சி மும்பையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடுகிறது.
IT ரெய்டு
சர்தார் வல்லபாய் பட்டேல் என்ற கட்சி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகும். இக்கட்சி மும்பையில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இக்கட்சியின் சார்பில் போட்டியிடும் எந்த ஒரு வேட்பாளருக்கும், சொத்தும் வருமானமும் கிடையாது என்று வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சொந்த வாகனமும் கிடையாது. இதில் இரண்டு வேட்பாளருக்கு சொந்த வீடு கூட கிடையாது.
அதே சமயம் , வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 200 பேருக்கு எதிராக வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையில் சர்தார் வல்லபாய் பட்டேல் கட்சியும் அடங்கும்.
ரூ.55 கோடி நன்கொடை
அதாவது இந்த கட்சியானது எந்த வித செயல்பாட்டிலும் ஈடுபடாமல் ரூ.55 கோடி அளவுக்கு நன்கொடை பெற்றுள்ளது. வங்கிகள் மூலம் பெற்ற நன்கொடையில் இருந்து தங்களுக்கான கமிஷனை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை நன்கொடை கொடுத்தவர்களிடமே திரும்ப கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக கடந்த 2022 -ம் ஆண்டு அக்கட்சியின் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலேஷ் பேசிய போது, "எங்களது கட்சிக்கு குஜராத் மாநிலத்தில் நான்கு கவுன்சிலர்கள் இருக்கின்றனர். வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கே தேர்தலில் போட்டியிடுகின்றோம்" என்றார்.
குறிப்பாக, கமலேஷ் தேர்தலில் போட்டியிடுவது அவரது மனைவிக்கு கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |