பார்ட்டிகேட் ஸ்கேண்டல்: 50 பேருக்கு அபராதம்; போரிஸ் ஜான்சன் இதில் சிக்கினாரா?
கோவிட் விதிகளை மீறி டவுனிங் ஸ்ட்ரீட் வளாகத்தில் மதுமான விருந்துகளை நடத்திய குற்றச்சாட்டுகளுக்காக 50-க்கும் மேற்பட்ட அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
வைட்ஹால் மற்றும் டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற கோவிட் லாக்டவுன் விதிகளை மீறி மதுபான விருந்துகள் நடத்தப்பட்டதற்கு கடந்த மாதம் 20 அபராதங்கள் விதிக்கப்பட்டன.
இன்று அது தொடர்பில், மேலும் 30 அபராதங்களை வழங்குவதாக லண்டன் பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. ஆனால் இந்த அபராத நோட்டீஸ்களை பெறுபவர்களின் பிரதமர் போரிஸ் ஜான்சனும் உள்ளாரா என்பது தெரியவில்லை.
பொலிஸாரால் வழங்கப்பட்ட அபராதங்கள் மூத்த வைட்ஹால் மற்றும் அரசாங்கப் பிரமுகர்களின் சட்டத்தை மீறியதற்கான ஆதாரம் என்பதை பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்னும் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை.
ஸ்காட்லாந்து யார்டு ஆபரேஷன் ஹில்மேனின் கீழ், கோவிட் விதி மீறல்கள் குறித்த விசாரணையைத் தொடரும் நிலையில், மேலும் அபாரதங்கள் விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
பார்ட்டிகேட் ஊழல் (Partygate Scandal) என்று அழைக்கப்படும் அரசாங்கப் பிரமுகர்களின் இந்த விதிமீறல், நாடு முழுவதும் உள்ள மக்களை ஆத்திரப்படுத்தியது, ஏனெனில் லாக்டவுன் விதிகளை முக்கிய பொறுப்பில் இருக்கும் அரசாங்க அதிகாரிகளே ரகசியமாக உடைக்கிறார்கள் என்பதை மக்கள் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
மெட் பொலிஸார் இன்று வெளியிட்ட அறிக்கையில்: "வைட்ஹால் மற்றும் டவுனிங் ஸ்ட்ரீட்டில் கோவிட்-19 விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை தொடர்ந்து முன்னேறி வருகிறது.
செவ்வாய் 12 ஏப்ரல் 2022 நிலவரப்படி, கோவிட்-19 விதிமுறைகளை மீறியதற்காக, 50-க்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு அபாரதங்கள் விதித்துள்ளோம். இந்த விசாரணையை வேகத்தில் முன்னேற்றுவதற்கு நாங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டது.