பார்ட்டிகேட் விவகாரம்: மந்திரிகளின் பெயரை வெளியிட்டு அவமானப்படுத்தவுள்ள அரசு ஊழியர்!
டவுனிங் ஸ்ட்ரீட் மற்றும் வைட்ஹாலில் இருந்து வெளிவந்த மதுபான விருந்து காட்சிகள் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிட உள்ள பிரித்தானிய அரசு ஊழியர் சூ கிரே, கோவிட் விதிகளை மீறிய எண்.10 ஊழியர்களின் பெயர்களை வெளியிட்டு அவமானப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தகவல்களின்படி பெருநகர காவல்துறை விசாரணையை முடித்த பிறகு, அடுத்த வாரம் பார்ட்டிகேட் விவகாரம் குறித்த தனது முழு அறிக்கையை மூத்த அரசு ஊழியர் சூ கிரே வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அபராதம் விதிக்கப்பட்ட 83 நபர்களில் யாருடைய பெயரையும் பெருநகர காவல்துறை அதிகாரிகள் குறிப்பிடவில்லை. பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அவரது மனைவி கேரி ஆகியோருக்கு தலா ஒரு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிரே தனது அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னதாக, அவர் பெயர்களை வெளியிட விரும்பும் நபர்களை தொடர்பு கொண்டுவருவதாக தகவல்கள் கூறுகின்றன.
கிரே அவர்களைப் பற்றி வெளியிட விரும்பும் தகவல்களுக்கு பதிலளிக்க அவகாசம் எதிர்பார்க்கப்படுபவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கோவிட் விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட அமைச்சர்களின் பெயரை குறிப்பிடுமாறு இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் அழைப்பு விடுத்துள்ளார். அபராதம் விதிக்கப்பட்ட எந்த அமைச்சர்களைப் பற்றிய அறிக்கையில் "வெளிப்படைத்தன்மை" இருக்க வேண்டும் என்று கூறினார்.
நான்கு மாதங்கள் நீடித்த இந்த விசாரணைக்கு 460,000 பவுண்டுகள் செலவானது. அதனைத் தொடர்ந்து 126 அபராதங்கள் விதிக்கப்பட்டன. கிரேயின் அறிக்கையின் இடைக்கால பதிப்பு ஜனவரியில் வெளியிடப்பட்டது, இருப்பினும் அது தனிநபர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.