விஜயின் அரசியல் மாநாட்டிற்கு நூதனமாக அழைப்பு விடுக்கும் கட்சி தொண்டர்கள்
விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு நூதன முறையில் கட்சி தொண்டர்கள் அழைப்பு விடுத்தனர்.
மாநாட்டிற்கு அழைப்பு
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு ஒக்டோபர் 27 -ம் திகதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் இந்த அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டின் நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சி மாநாடு நடைபெற இரண்டு நாட்களே உள்ளதால் பொதுமக்களின் ஆதரவை சேர்க்கும் பணிகளில் கட்சி தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் பொதுமக்கள், சாலையில் செல்வோர் மற்றும் வாகனம் ஓட்டிகள் உள்ளிட்டோரிடம் டோக்கன் ஒன்றை தொண்டர்கள் வழங்கியுள்ளனர்.
அதாவது, இந்த டோக்கனுக்கு டீ வழங்கப்படுகிறது. இதுகுறித்து நகர செயலாளர் கூறுகையில், "முதற்கட்டமாக கடைவீதியில் இலவச டீ டோக்கன் வழங்கி மாநாட்டிற்கு அழைக்கும் பணி துவங்கி உள்ளது. மகளிர் அணி நிர்வாகிகளை முன்னிறுத்தி வீடு தோறும் அழைப்பிதழ் வழங்கப்படவுள்ளது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |