நாவூறும் சுவையில் பருப்பு போளி.., இலகுவாக செய்வது எப்படி?
போளி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி.
இந்த போளியை பருப்பு போளி, தேங்காய் போளி என இரண்டு வகைகளாக செய்வார்கள்.
அந்தவகையில், அனைவரும் விரும்பி உண்ணும் பருப்பு போளி இலகுவாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மைதா- 250g
- உப்பு- 1 சிட்டிகை
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடலை பருப்பு- ¾ கப்
- தண்ணீர்- 1 கப்
- வெல்லம்- 1 கப்
- ஏலக்காய் தூள்- ¼ கப்
- நெய்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
பின் இதில் எண்ணெய் சேர்த்து 3 மணி நேரம் மூடி போட்டு ஊறவைக்கவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து குக்கரில் 1 கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனையடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் அரைத்த பருப்பு, வெல்லம், ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கிளறி கெட்டியாகி வந்ததும் இறக்கவும்.
அடுத்து பிணைந்து வைத்த மாவின் உள்ளே செய்துவைத்து பருப்பை வைத்து மடித்து தவாவில் நெய் சேர்த்து சுட்டு எடுத்தால் சுவையான பருப்பு போளி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |