புரோட்டீன் சத்தை அள்ளித்தரும் பருப்பு குழம்பு! அதுவும் கிராமத்து ஸ்டைலில்
கிராமத்து ஸ்டைலில் சுவையான பருப்பு குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள், ருசி பயங்கரமாக இருக்கும்.
இதனை சாதாரண பாத்திரத்தில் செய்வதற்கு பதிலாக மண்சட்டியில் செய்தால் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும்.
சாதாரண பாத்திரத்திலும் இதனை செய்து சாப்பிடலாம், சுவையான பருப்பு குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
Mozis menu
தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு-200 கிராம்
- சின்ன வெங்காயம்-15
- தேங்காய்- 2 துண்டு
- காய்ந்த மிளகாய்-6
- மஞ்சள்-1 துண்டு
- சீரகம்- 1/2 டீஸ்பூன்
- உப்பு-தேவையான அளவு
- பெருங்காயம்- சிறிதளவு
- கடுகு- சிறிதளவு
- கருவேப்பிலை- ஒரு கொத்து
- தேங்காய் எண்ணெய்-3 டீஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும்.
இதன் பின் சீரகம், மஞ்சள்,தேங்காய், காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம்,ஆகியவற்றை மசாலாவாக அரைத்துக்கொள்ளவும்.
பின் வெந்த பருப்புடன் இந்த அரைத்துவைத்துள்ள மசாலா சேர்த்து நன்கு கடைந்த கொள்ளவும்.
Recipes plaza
பின் ஒரு தாளிப்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து பருப்பு கலவையை ஊற்ற வேண்டும்.
நன்கு கொதித்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கினால் சுவையான கிராமத்து ஸ்டைல் பருப்பு குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |