சென்னை தொழிலதிபருடன் தமிழ்ப்பட நடிகைக்கு திருமணம்: வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை பார்வதி நாயர் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.
பார்வதி நாயர்
தமிழில் நிமிர்ந்து நில், என்னை அறிந்தால், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி நாயர்.
மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர், கடைசியாக விஜய்யின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்திருந்தார்.
அபுதாபியைச் சேர்ந்த இவருக்கும், சென்னை தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும் கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணம்
அதனைத் தொடர்ந்து பார்வதி, ஆஷ்ரித் ஜோடிக்கு நேற்று திருமணம் நடந்தது. இதில் இருவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.
திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மொடலிங் துறையில் அறிமுகமான பார்வதி நாயர், நேவி குயின் அழகி போட்டியின் டைட்டில் வின்னராக தெரிவானவர் ஆவார்.
இவரது தந்தை கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும், இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் அபுதாபியில் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |