சத்தான பாசிபயறு பக்கோடா செய்து சாப்பிடுங்க! நன்மைகள் ஏராளம்
பாசிப்பயிறு அதிக அளவில் புரதசத்தும் மாப்பொருளையும், குறைந்த அளவில் கொழுப்புச்சத்தையும் கொண்டுள்ளது.
முளைக்கட்டிய பாசிப்பயறு சமச்சீர் உணவாக அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
பாசி பயிரை பயன்படுத்தி கொழுக்கட்டை, மோதகம், பொங்கல், பாயசம், கஞ்சி போன்ற வழக்கமாக செய்யப்படும் உணவுகளை விட வித்யாசமாக பாசி பயிரில் பக்கோடா செய்து சாப்பிட்டால் சுவையாகவும், வித்தியாசமாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
- பாசி பருப்பு - 1 கப்
- உளுத்தம் பருப்பு - 1/4 கப்
- பச்சரிசி - 1/4 கப்
- வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
- இஞ்சி - 1 துண்டு பொடியாக நறுக்கியது
- பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது
- உப்பு - 1 தேக்கரண்டி
- பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி ஓமம் - 1தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை நறுக்கியது
- எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாசி பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சரிசி சேர்த்து நன்கு கழுவி 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
பிறகு தண்ணீர் இன்றி சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
மாவை பாத்திரத்திற்கு மாற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, பெருங்காயத்தூள், ஓமம், கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் தயார் செய்த மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அருமையான பாசி பருப்பு பக்கோடா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |