பிரான்சில் ஐரோப்பிய சுகாதார சான்றிதல்... வரும் ஜுலை 1 முதல் நடைமுறை! வெளியான முக்கிய தகவல்
பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் ஐரோப்பிய அளவில் சுகாதார சான்றிதழ் எப்போது வரும் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் உலகின் பல நாடுகளில் உள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த கொரொனவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக ஐரோப்பிய அளவில் சுகாதார சான்றிதழ்(pass sanitaire) என்பது மிகவும் முக்கியம் எனவும், இது எப்போது நடைமுறைக்கு வரும் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ஐரோப்பிய அளவில், ஜுலை முதல் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரான்சின் வெளிவிகார அமைச்சர்,Jean-Yves Le Drian தெரிவித்துள்ளார்.
கொரோனாப் பரிசோதனையில் தொற்று இல்லை என்ற உறுதிபடுத்த வேண்டும். அதே போன்று தடுப்பு ஊசி போடப்பட்டதற்கான சான்றிதழ், அல்லது இரண்டு வாரங்களில் இருந்து ஆறு மாதங்களிற்குள் கொரோனத் தொற்று ஏற்பட்டதற்கான உறுதி போன்ற மூன்று காரணங்களின் அடிப்படையில் இந்தச் சுகாதாரச் சான்றிதழ் வழங்கப்படும் என்று வெளிவிகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.