மரணமடைந்தவரை புதைக்கச் சென்றவர்கள் சந்தித்த அதிர்ச்சி: ஒரு திடுக் வீடியோ
அமெரிக்காவில், மரணமடைந்த ஒருவரது சவப்பெட்டியை சுமந்து சென்ற சிலர், அவருக்காக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் விழுந்த அதிர்ச்சியளிக்கவைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
ஒரு திடுக் வீடியோ
அமெரிக்காவின் பிலதெல்பியா நகரில், சென்ற மாதம் 21ஆம் திகதி, மாரடைப்பால் மரணமடைந்த பெஞ்சமின் (Benjamin Aviles) என்பவரின் இறுதிச்சடங்குக்காக மக்கள் Greenmount Cemetery என்ற கல்லறையில் கூடியிருந்தார்கள்.
பெஞ்சமினின் மகனும், நண்பர்கள் சிலரும் பெஞ்சமினின் உடல் அடங்கிய சவப்பெட்டியை குழியில் இறக்குவதற்காக கொண்டு சென்றுள்ளார்கள்.
ஆனால், எதிர்பாராதவிதமாக, குழிக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் திடீரென உடைய, சவப்பெட்டியுடன் அதை சுமந்துவந்த அனைவரும் அந்த குழிக்குள் விழுந்தார்கள்.
விழுந்ததில், அனைவருக்கும் கால்கள், கைகள் என பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டன. பெஞ்சமினுடைய மகனுக்குத்தான் அதிக காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இறுதிச்சடங்குக்காக வந்திருந்த அனைவரும் பதற, குழிக்குள் விழுந்தவர்களை தூக்கியெடுக்க சிலர் விரைந்தார்கள்.
இறுதிச்சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரு நாட்டில் இந்த விரும்பத்தாக சம்பவம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பெஞ்சமின் குடும்பத்தார் இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்த மையம் முறைப்படி மன்னிப்புக் கேட்கவேண்டும் என கோரியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |