லண்டன் இரயிலில் புகைப்பிடித்த 2 பேரை தட்டி கேட்ட பயணிக்கு நேர்ந்த கதி! மூக்கில் இருந்து கொட்டிய இரத்தம்
லண்டன் இரயிலில் புகைப்பிடித்த இருவரை தட்டி கேட்ட நபர் தாக்கப்பட்டதில் அவர் மூக்கில் இருந்து இரத்தம் கொட்டியது.
தென்கிழக்கு லண்டனில் தான் இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி நடந்துள்ளது. Charing Cross இரயில் நிலையத்தில் இருந்து Gravesend வரை செல்லும் இரயிலில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.
அப்போது இரயிலில் இரண்டு ஆண்கள் புகைப்பிடித்தபடி இருந்தனர். அந்த சமயத்தில் அங்கிருந்த பயணி ஒருவர், புகைப்பிடித்த நபர்கள் முன்னர் நேருக்கு நேராக நின்று அது குறித்து தட்டி கேட்டார்.
அப்போது அதில் ஒருவர், அந்த பயணி மீது பாய்ந்து சென்று முகத்தில் தொடர்ந்து குத்தினார். இதில் அந்த பயணியின் மூக்கில் இருந்து இரத்தம் கொட்டியது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் தற்போது முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானிய போக்குவரத்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரின் சிசிடிவி புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்களிடம் சம்பவம் குறித்து தகவல்கள் இருக்கலாம். இது எங்களின் விசாரணைக்கு உதவும்.
அவர்களை யாருக்காவது அடையாளம் தெரிந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.