விமானப் பயணி காலணிகளுக்குள் மறைத்துவைத்துக் கொண்டு வந்த பொருள்
Passenger caught with gold paste hidden in shoes: விமானப்பயணி ஒருவர் தன் காலணிகளுக்குள் தங்க பசையை மறைத்து கொண்டுவந்த நிலையில் அதிகாரிகளிடம் சிக்கினார்.
ஷார்ஜாவிலிருந்து மும்பை வந்த பயணி ஒருவரை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுள்ளார்கள்.
காலணிகளுக்குள் மறைத்துவைத்துக் கொண்டு வந்த பொருள்
பயணி ஒருவர் தங்கம் கடத்திக்கொண்டுவருவதாக ஏற்கனவே ரகசிய தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில், அந்த பயணியின் உடைமைகளை சோதனையிட்டுள்ளார்கள் அதிகாரிகள்.

ஆனால், அவரிடம் எந்த தங்கமும் இல்லை. ஆகவே, அவரது காலணிகளை ஸ்கேன் செய்ய, அவற்றிற்குள் ஏதோ மறைத்துவைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

சோதனையில், தன் காலணிக்குள் அவர் 300 கிராம் தங்கப் பசையை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 37 லட்ச ரூபாய் ஆகும்.
கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.