விபத்து நடைபெற்ற விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த பயணி முன்கூட்டியே எச்சரிக்கை
அகமதாபாத் விமான விபத்தை பயணி ஒருவர் முன்கூட்டியே எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயணி எச்சரிக்கை
நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. AI171 விமானமாக இயங்கும் போயிங் 78708 விமானம், இரண்டு விமானிகள் மற்றும் பத்து கேபின் பணியாளர்கள் உட்பட 242 பேரை ஏற்றிச் சென்றது. இதில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர்.
மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.
இந்நிலையில், இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் இருப்பதை சுட்டிக்காட்டி முன்கூட்டியே பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "விமானத்தில் பயணிகளுக்கான சீட்டில் இருக்கும் டச் ஸ்கிரீன், தொலைபேசி என எதுவும் வேலை செய்யவில்லை.
விமானத்தின் நிலை அசௌகரியமாக இருக்கிறது" என்று ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இவர், விபத்து நடந்த விமானத்தில் 2 மணி நேரத்துக்கும் முன்னதாக பயணித்துள்ளார்.
அதேபோல, ட்ரீம்லைனர் விமான தயாரிப்பில் ஈடுபட்ட பொறியாளர் ஒருவரும் எச்சரித்துள்ளார். அதாவது, இந்த ஆண்டு தொடக்கத்திலேயே இந்த வகை விமானங்கள் மிகப்பெரிய விபத்தில் சிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
இதனை அவர் அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்திடம் (FAA) இதை புகாராகவும் பதிவு செய்துள்ளார். அந்த புகாரில் அவர், போயிங் நிறுவனம் 777 மற்றும் 787 விமானங்களின் உற்பத்தியின் போது குறுக்குவழிகளை எடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
I was in the same damn flight 2 hours before it took off from AMD. I came in this from DEL-AMD. Noticed unusual things in the place.Made a video to tweet to @airindia i would want to give more details. Please contact me. @flyingbeast320 @aajtak @ndtv @Boeing_In #planecrash #AI171 pic.twitter.com/TymtFSFqJo
— Akash Vatsa (@akku92) June 12, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |