சுவிட்சர்லாந்தில் ஏரிக்குள் விழுந்த விமானம்: வெளியாகியுள்ள ஆறுதலளிக்கும் செய்தி
சுவிட்சர்லாந்திலுள்ள ஏரி ஒன்றிற்குள் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து மாயமான நிலையில், அதில் பயணித்த இருவரும் உயிருடன் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ஆறுதலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
ஏரிக்குள் விழுந்த விமானம்
நேற்று திங்கட்கிழமையன்று, சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் ஏரியில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து மாயமாகியது.
இந்நிலையில், அதில் ஆஸ்திரியா நாட்டவரான 78 வயதுடைய விமானியும், 55 வயதுடைய சுவிஸ் பெண்மணி ஒருவரும் பயணித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், விமானி காயங்களின்றி தப்பியுள்ளதாகவும், அந்த சுவிஸ் பெண்மணி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது, இருவருமே உயிர் பிழைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மதியம் லூசெர்ன் பொலிசார் இந்த தகவலை வெளியிட்ட நிலையில், அந்த விமானத்தின் விமானி அவசரமாக அந்த விமானத்தை ஏரியில் தரையிறக்க நேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
விடயம் என்னவென்றால், ஏரியில் விழுந்த விமானம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. விமானத்தைத் தேடும் பணி தொடர்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |