இரத்தக் கறை படிந்த இருக்கை... பிரான்ஸ் விமானத்தில் 8 மணி நேரம் அவஸ்தைப் பட்ட கனேடிய பயணி
பிரான்சின் பாரிஸ் நகரில் இருந்து கனடாவின் ரொறன்ரோ பயணப்பட்ட பயணி ஒருவர், பிரான்ஸ் விமானத்தில் தாம் அனுபதித்த நெருக்கடியை வெளியிட்டு புகார் அளித்துள்ளார்.
கனேடிய சுகாதாரத் துறை விசாரணை
குறித்த பயணியின் புகாரை அடுத்து கனேடிய சுகாதாரத் துறை விசாரணை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் பிரான்ஸ் விமானத்தில் ரொறன்ரோ புறப்பட்டு சென்றதாகவும்,
ஆனால் தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையானது, இரத்தக் கறை படிந்து, துர்வாடையுடன் காணப்பட்டதாகவும், 8 மணி நேர பயணத்தில் கடும் அவஸ்தையை எதிர்கொண்டதாகவும் அந்த நபர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் 30ம் திகதி தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளதாக கனேடிய சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. மேலும், நாட்டுக்கு எந்த ஒரு பொருள் கொண்டுவரப் பட்டாலும், அது பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வரையில் இருத்தல் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
THE CANADIAN PRESS
Habib Battah என்ற அந்த பயணி பாரிஸ் நகரில் இருந்து ஏர் பிரான்ஸ் விமானத்தில் ரொறன்ரோ நகருக்கு பயணப்பட்டுள்ளார். விமானத்தில் தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைக்கு சென்றதும், மிக மோசமான வாடை வீசுவதையும், அந்த பகுதியானது இரத்தக் கறையுடன் காணப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திடீரென்று இரத்தப் போக்கு
இதனையடுத்து, விமான ஊழியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், சுத்தம் செய்யும் பொருட்களை தமக்கு அவர்கள் அளித்ததாக Habib Battah குறிப்பிட்டுள்ளார். 8 மணி நேர பயணம் என்பதால், தாம் மெனக்கெட்டு சுத்தம் செய்ய முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
விசாரித்ததில், பயணி ஒருவருக்கு திடீரென்று இரத்தப் போக்கு ஏற்பட்டதாகவும், உரிய முறையில் சுத்தம் செய்யாததாலையே, அந்த இருக்கையில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
THE CANADIAN PRESS
மேலும், இருக்கை எதுவும் காலியாக இல்லை என்பதால், அந்த இருக்கையில் பயணத்தை தொடரும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |