இங்கிலாந்தில் தடம்புரண்ட ரயில்: இரண்டு நாட்களில் இரண்டாவது சம்பவம்
இங்கிலாந்தின் எசெக்ஸில் மீண்டும் ஒரு ரயில் தடம்புரண்டுள்ளது.
இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸிலுள்ள லூயிஸ் என்னுமிடத்தில் நேற்று முன் தினம் ஒரு பயணிகள் ரயில் தடம்புரண்டது.
இந்நிலையில், நேற்று மீண்டும் ஒரு பயணிகள் ரயில் தடம்புரண்டுள்ளது.
இங்கிலாந்தில் தடம்புரண்ட இரண்டாவது ரயில்
Rayleigh என்னுமிடத்திலிருந்து Wickford ரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் ரயில் ஒன்று, நேற்று மதியம் உள்ளூர் நேரப்படி 2:12 மணியளவில் Wickford அருகே தடம்புரண்டுள்ளது.

ரயிலில் 45 பேர் பயணித்த நிலையில், யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினரான மார்க் ஃப்ராங்கோயிஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்றைய திகதியிட்ட பயண்ச்சீட்டுகளை இன்றும் பயன்படுத்திக்கொள்ளலாம் என ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படி இரண்டு நாட்களில் இரண்டு ரயில்கள் தடம்புரண்டுள்ள விடயம் சற்றே அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில், பிரித்தானிய போக்குவரத்துத் துறை, உலகின் பாதுகாப்பான ரயில் சேவைகளில் பிரித்தானிய ரயில் சேவையும் ஒன்று என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |